தாய்ப்பால் பெருக்கி - குழந்தைக்கும் ஊட்டச்சத்து அளிக்கும்
₹355.00 Original price was: ₹355.00.₹325.00Current price is: ₹325.00.
தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்கும் இயற்கை பொருட்களான ராகி, உளுந்து, அம்மான் பச்சரிசி இலை பொடி ,கேழ்வரகு, தோல் உளுந்து , கசகசா ,பூசணி விதை ,வெள்ளரி விதை, சீரகம் , ஏலம் ,பாதாம் பிசின் ,சதாவரி மற்றும் தினை ஆகியவற்றால் தயாரித்துள்ளோம், தாய்ப்பால் பெருக்குவது மட்டுமில்லாமல் தாய் மற்றும் குழந்தைக்கு ஊட்டச்சத்து அளிக்கிறது
COD & Gpay,UPI,Card Available
In stock
குழந்தைக்கு தேவையான தாய்ப்பால் கொடுக்க முடியாமல் கஷ்டப்படும் தாய்மார்கள் கவலைப்பட வேண்டாம் எங்கள் தாய்ப்பால் பெருக்கியில் தாய்ப்பால் உற்பத்திக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் உள்ளதால் தாய்ப்பால் பெருகுவது மட்டுமல்லாமல் குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றது. இது முழுமையாக 100% இயற்கையான பொருட்களைக் கொண்டு தயாரித்து உள்ளதால் தாய்மார்களுக்கு எந்த பயமும் வேண்டாம், மேலும் தாய்மார்களுக்கு உதவும் வகையில் குறிப்புகள் கொடுத்துள்ளோம் மேலும் வாசித்து பயன்பெறுங்கள்.
தாய்ப்பால் பெருக்கியின் நன்மைகள்
1. தாய்ப்பால் உற்பத்தி அதிகரிக்கிறது:எங்கள் தனித்துவமான கலவையானது பாலூட்டலை அதிகரிக்க, அதிக தாய்ப்பால் உற்பத்தி செய்கிறது, உங்கள் குழந்தை பசிக்கு ஊட்டச்சத்துமிக்க தீர்வு கிடைக்கிறது
2. குழந்தைக்கு ஊட்டச்சத்து நன்மைகள்:செறிந்த தாய்ப்பாலுடன், உங்கள் குழந்தை ஆரோக்கியமான மற்றும் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது.
3. தாயின் எலும்புகளை வலுப்படுத்துகிறது:தாய்ப்பால் பெருக்கியில் உள்ள பொருட்களில் வலுவான எலும்புகளை ஊக்குவிக்கும் தாதுக்கள் நிறைந்துள்ளன, இது புதிய தாய்மார்கள் பிரசவத்திற்குப் பின் உடலை வலுப்படுத்த உதவுகிறது
4. இடுப்பு வலி மற்றும் உடல் அசௌகரியத்தை நீக்குகிறது:எங்கள் தாய்ப்பால் பெருக்கி பிரசவத்திற்குப் பிறகு அடிக்கடி ஏற்படும் அசௌகரியத்தைத் தணிக்க உதவுகிறது, விரைவில் பிரசவ வலியில் இருந்து மீண்டு வரலாம்
தாய்ப்பால் பெருக்கியை எவ்வாறு பயன்படுத்துவது ?
உணவுக்கு முன் ஒரு நாளைக்கு 3 முறை சூடான பாலுடன் 1-2 டேபிள் ஸ்பூன் தாய்ப்பால் பெருக்கியை கலந்து குடிக்கலாம். பாலை வடிகட்டாமல் குடிப்பதே சிறந்தது.
முக்கிய குறிப்பு:
பதப்படுத்தப்பட்ட பாலை பயன்படுத்துவதை தவிர்க்கவும்
உங்கள் தாய்ப்பால் உற்பத்தியை பெருக்குவதற்கு எங்கள் தாய்ப்பால் பெருக்கி போதுமானது மேலும் உங்கள் வாழ்க்கை முறையில் சில மாற்றங்கள் கொண்டு வருவதன் மூலம் தாய்மார்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் அதற்கான குறிப்புகளை இங்கே கொடுத்துள்ளோம்
தாய்மார்களுக்கு எங்களின் சில அறிவுரைகள்
தாய்ப்பால் உற்பத்தி உணவு சார்ந்தது மட்டுமல்ல உடல் மற்றும் மனது ஆரோக்கியத்தையும் உள்ளடக்கும் அதிக மன அழுத்தத்தோடு உள்ளவர்களுக்கு தாய்ப்பால் உற்பத்தி பாதிக்கப்படும் இதனை தவிர்க்க யோகா மற்றும் மூச்சுப் பயிற்சி செய்யலாம் மேலும் குழந்தைக்கு ஆரோக்கியமான தாய்ப்பால் வழங்குவதை கற்பனை செய்து பயிற்சி எடுக்கலாம் இந்த உளவியல் பயிற்சி உங்கள் தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்க உதவலாம் மேலும் உங்கள் வாழ்வியல் முறையில் சரியான உணவு பழக்க வழக்கங்களை கொண்டு வருவதன் மூலமாகவும் உங்கள் தாய்ப்பால் உற்பத்தியை இயற்கையாகவே அதிகரிக்கச் செய்யலாம் எங்கள் தாய்ப்பால் பெருக்கி உடன் சரியான இயற்கையான உணவுகளை உண்பதன் மூலம் அதன் பயன்களை மேலும் அதிகரிக்கச் செய்யலாம்.
1. சுரைக்காய்
– நீர்ச்சத்து நிறைந்தது.
- பாலூட்டலை ஆதரிக்கும் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை வழங்குகிறது.
2. முருங்கை இலை
– வைட்டமின்கள் ஏ, சி மற்றும் கால்சியம் நிரம்பியுள்ளது.
- ஊட்டச்சத்து அடர்த்தி காரணமாக பால் உற்பத்தியை அதிகரிக்க உதவும்.
3. காய்கறி சூப்
- நீரேற்றம் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த, பல்வேறு காய்கறிகளை சேர்த்திடுங்கள்.
- பாலூட்டுதல்-தேவையான தாதுக்களை பெறலாம்
4. கொய்யா
– வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து அதிகம்.
- செரிமானத்தை மேம்படுத்தலாம் மற்றும் ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.
5. பூண்டு + பால்
– பாலுடன் பூண்டு சேர்ப்பதால் சுவை கூடுவது மட்டுமல்லாமல் இரத்தத்தை சுத்திகரித்து தாய்ப்பால் பெருக்கத்திற்கு உதவுகிறது.
- மேலும் கெட்ட வாயுக்களை வெளியேற்றுகிறது
6. தானியக் கஞ்சி
– முழு தானியங்கள் நீடித்த ஆற்றலை வழங்குகின்றன.
- நார்ச்சத்து நிறைந்தது மற்றும் கொட்டைகள் (நட்ஸ்) மற்றும் விதைகள் பாலூட்டலை மேம்படுத்தும்
7. நாட்டு கோழி முட்டை
– புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளுடன் கூடிய ஊட்டச்சத்துக்கள்.
- தாய்ப்பால் கொடுக்கும் தாய்க்கு ஒட்டுமொத்த ஊட்டச்சத்து தேவைகளை கொடுக்கிறது
8. தயிர்
– புரோபயாடிக்குகள் மற்றும் கால்சியத்தின் சிறந்த ஆதாரம்.
- குடல் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது மற்றும் செரிமானத்தை மேம்படுத்துகிறது.
9. மீன்
– மூளை வளர்ச்சிக்கு முக்கியமான ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன.
- அதிக புரதம்; சால்மன் போன்ற புரோட்டீன் நிறைந்த மீன்களை எடுத்துக்கொள்ளுங்கள்.
10. மட்டன்
– புரதம் மற்றும் இரும்புச்சத்துக்கான நல்ல ஆதாரம்.
- ஆற்றல் நிலைகளை நிரப்ப உதவுகிறது மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது.
எங்கள் தாய்ப்பால் பெருக்கியுடன் நல்ல உணவு ஆகாரங்களையும் எடுத்துக் கொள்வதன் மூலம் தாய்ப்பால் பெருகுவதோடு மட்டுமல்லாமல் புதிதாக பிரசவித்த தாய்மார்கள் விரைவில் மீண்டு வர உதவுகிறது
பாலூட்டும் தாய்மார்கள் தவிர்க்க வேண்டியவை
1. உணவைத் தவிர்க்காதீர்கள்: பால் உற்பத்தியை அதிகரிக்க நீங்கள் சமச்சீரான உணவைச் சாப்பிடுகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
2. நீரேற்றத்தை புறக்கணிக்காதீர்கள்: நீரேற்றமாக இருக்க நிறைய தண்ணீர் குடிக்கவும்.
3. அதிகப்படியான காஃபின் & சாக்லேட் உட்கொள்ள வேண்டாம்: காபி அல்லது எனர்ஜி பானங்கள் தூக்கத்தை பாதிக்கும் என்பதால் அவற்றைக் கட்டுப்படுத்துங்கள்.
4. புகைபிடிக்காதீர்கள் /மது அருந்தாதீர்கள்: இவை உங்களுக்கும் உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும்.
5. மன அழுத்தம் தாய்ப்பால் உற்பத்தியை குறைப்பது மட்டுமல்லாமல் குழந்தையின் மூளை வளர்ச்சி மற்றும் உடல் வளர்ச்சியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவே மன அழுத்தத்தை தவிர்த்து மகிழ்ச்சியாக இருங்கள்
எங்கள் தயாரிப்பு பற்றிய கூடுதல் தகவலுக்கு அல்லது சந்தேகங்களுக்கு, எங்களைத் தொடர்புகொள்ள தயங்காதீர்கள்: 9487261280
mathuraiveeran R (verified owner) –
really works
[...]