Moringa Powder – முருங்கை அன்னப்பொடி என்பது முருங்கை மரத்தின் காய்ந்த இலைகளில் இருந்து தயாரிக்கப்படும் ஊட்டச்சத்து நிறைந்த பொருள். வைட்டமின்கள் ஏ, சி மற்றும் ஈ நிறைந்துள்ளது. நோயெதிர்ப்பு சக்தி வேண்டுவோர்க்கு அற்புதமான உணவு பொருள். இது உடலுக்கு தேவையான ஒட்டுமொத்த ஊட்டத்தையும் அளித்து நமது ஆரோக்கியத்தை மேம்பட செய்கிறது.
உளுந்தில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளதால் உண்ணும் உணவினை நன்கு செரிக்கச் செய்வதுடன் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களையும் உங்கள் உடல் உறிஞ்ச உதவுகின்றன. நார்ச்சத்தானது வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், வாயுத்தொல்லை உள்ளிட்ட செரிமான பிரச்சினைகளை சரி செய்கிறது
கறிவேப்பிலையில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, மற்றும் விட்டமின் சி, விட்டமின் ஏ, விட்டமின் பி, விட்டமின் இ, போன்ற சத்துகளும் விட்டமின்களும் நிறைந்துள்ளது. உடலில் ஏற்படும் நோய் தொற்றுக்கு எதிராகவும் போராடுகிறது. மேலும் தலைமுடி மற்றும் உங்கள் தோல் ஆகிவற்றின் தன்மையை மேம்படுத்துகிறது.
இன்னும் ஏராளமான நன்மைகள் இதில் இருப்பதால் நாம் தினம் உண்ணும் உணவில் சிறிதளவு முருங்கை அன்னப்பொடி சேர்த்து நன்றாக கிளறிவிட்டு அல்லது பிசைந்து சாப்பிடலாம். தினம் தினம் சாப்பிட்டு வர உடலில் மேம்பட்ட மாற்றங்களை உணரலாம்
சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள்:
முருங்கை இலை தூள், மிளகு, தோல் உளுந்து, கறிவேப்பிலை, வெந்தயம், பூண்டு, கொண்டைக்கடலை, காயம், புளி, எள்
Reviews
There are no reviews yet